நள்ளிரவு! தனிமை! செல்போன் பெண்கள் தான் என் டார்கெட்! போலீசை அதிர வைத்த இளைஞனின் வாக்குமூலம்!

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் மற்ற செல்போன்களை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் செயின் மற்றும் செல்போன் அதிகளவில் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த புகார்கள் குறிப்பிட்ட பகுதிகளில் காவல் நிலையத்திற்கு வந்தடையும்.

புகார்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகினர். அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். சிசிடிவி கேமரா காட்சிகளை கண்டவுடன் காவல்துறையினர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குகள் அனைத்திற்கும் ஒரே ஒரு இளைஞர் தான் காரணமாக இருந்துள்ளார். அந்த நபர் இருசக்கர வாகனத்தில் செல்கின்றார். தனியாக இருக்கும்  பெண்களின் அருகில் செல்கின்றபோது வாகனத்தை மெதுவாக செலுத்தி அவர்களின் கழுத்தில் இருந்த நகைகளை அறுத்து கொண்டு வேகமாக அவ்விடத்திலிருந்து சென்று விடுகிறார்.

அவரை கைது செய்வதற்கு தனிப்படை அமைத்தனர். நெடுநாட்களாக வலைவீசித் தேடி வந்த நிலையில் காவல்துறையினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரின் பெயர் கார்த்தி என்பதும், இவர் சாத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் வாக்குமூலம் அளிக்கையில், "இரவில் பைக்கை எடுத்து செல்ல தொடங்குவேன். பெண்கள் தனியாக இருக்கும் போது அவர்களை நெருங்கி செல்வேன். அவர்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் அவர்களின் செயின்னை அறுப்பது எளிதாகும்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரிடமிருந்த செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.