ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இதுவரை மீட்கப்பட்ட குழந்தைகள்! புகைப்படங்களுடன் ஒரு பரபரப்பு ரிப்போர்ட்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இதுவரை பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகளின் வரலாற்றை காண்போம்.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் சுஜின் என்ற 2 வயது சிறுவன் நேற்று மாலை நேரத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து வருவதற்கான போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்திய நாட்டில் சமீப காலத்தில் ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகளின் பட்டியல் இதோ. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிங்ரவ்லி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு இந்த ஆண்டு தொடக்கத்தில், 3 வயது குழந்தை ஒன்று 30 அடி ஆழமான ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது. 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அமைந்துள்ளது. ஃபிப்ரவரி மாதத்தில் இங்கு ரவி பண்டிட் என்ற 6 வயது குழந்தை, 200 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 16 மழை நேர போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்பு குழு அவனை மீட்டெடுத்தது.

மார்ச் மாதத்தில் ஹரியானா மாநிலத்திலுள்ள ஹிசர் பகுதியில், 18 மாத குழந்தை 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்பு குழு குழந்தையை வெளியே எடுத்தது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிகார் மாநிலத்தில் சனா என்ற பகுதியில், 3 வயது குழந்தை 110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது. மேற்கூறப்பட்ட குழந்தைகளை போன்று சுஜினும் மீட்க்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம்.