ஸ்டாலினுக்கு அடுத்த சவால்..! அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் சொல்வாரா ஸ்டாலின்?.

அ.தி.மு.க.வினர் என்ன சவால் விட்டாலும், அதற்கு ஜகா வாங்குவதுதான் தி.மு.கவின் வேலையாகிவிட்டது. முதல்வர் எடப்பாடியார் நேரடியாகவே விவாதத்திற்கு ஸ்டாலினை அழைத்தும் அவர் வரவில்லை.


இந்த நிலையில், ஸ்டாலினை சவாலுக்கு அழைத்து மீண்டும் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கிறார், அமைச்சர் ஜெயகுமார். சென்னை அடையாறு ஜானகி எம்ஜிஆர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சவால் விடுத்தார். மேலும் அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும். திமுகவினர் நாகரிகமாக பேச வேண்டும் என்றார்.

ஏற்கனவே ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக சீமான், குஷ்பு போன்றோர் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தொகுதி மாறி போட்டிக்குத் தயாரா என்று ஜெயக்குமாரும் அழைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.