மோசமான தோல்வியிலிருந்து மீண்டு வருமா RCB? ரசிகர்கள் ஏக்கம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான IPL போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.


இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்வதால் கண்டிப்பாக ஒரு அணி வெற்றியை பெரும். அது எந்த அணியாக இருக்கும் என்பதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளனர். 

ராஜஸ்தான் ராயல் அணியை பொறுத்தவரை மூன்று போட்டிகளிலும் வெற்றிக்காக போராடி தோற்றது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றிக்கு போராடி தோற்றது. மற்ற இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமாக தோல்வி அடைந்து வருவதால் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அந்த அணியை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.