கர்ப்பிணிக்கு வைட்டமின் டி இல்லைன்னா எலும்பு நோய் வருமா? தெரிஞ்சிக்க இதை படிங்க..

குழந்தை நல்ல உடல் நலத்துடன் பிறக்கவேண்டும் என்ற ஆசை அத்தனை கர்ப்பிணி பெண்ணுக்கும் உண்டு. அதற்காக சரிவிகித சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உணவுகள் மூலம் தேவையான சத்துக்கள் கிடைக்காதபட்சத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளலாம்..


• கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் டி. உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை முறைப்படுத்தும் தன்மை வைட்டமின் டி-க்கு உண்டு.

• குழந்தையின் எலும்பு மற்றும் பற்கள் உறுதியுடன் இருப்பதற்கு வைட்டமின் டி மிகவும் சிறப்பாக துணை புரிகிறது.

• சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், தோலின் தன்மை, சூரிய ஒளியின் அளவு, அணிந்திருக்கும் ஆடை போன்றவை வைட்டமின் டி பெறுவதை உறுதிபடுத்துவதில்லை.

• வைட்டமின் டி போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால் குழந்தையின் எலும்பு மென்மையடைந்து ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி மாத்திரைகளை சரியாக சாப்பிடுபவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நரம்பு, தசை மற்றும் எலும்புகளில் நல்ல இறுக்கம் காணப்படும். மேலும் பெரியவர்களாகும்போது எலும்பு முறிவு போன்ற பாதிப்புகள் எளிதில் ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது.