நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதார மந்தம் சரியாகிவிடுமா? சென்செக்ஸ் சொல்வது என்ன?

ஆசியாவின் அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்ற பெயர் உள்ளது. மற்ற நாடுகளுடனான வணிக உறவை தக்கவைத்துக்கொள்ள எடுத்து வரும் முயற்சிகளின் விளைவாக.


இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விதிப்பில் பெரிய மாற்றத்தினை கொண்டு வந்து அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்புகளை தொடர்ந்து. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு புள்ளிகள் ஏறியது இது இரண்டாவது முறையாகும்.

இந்தியாவின் விதிக்கப்பட்டு வரும் கார்ப்பரேட் வரிகளைக் குறைப்பது மூலம். ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார முதலீட்டை ஈர்க்க பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும் அதற்காக அறிவிப்பினை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர்.  

அதன்படி கார்ப்பரேட் வரிகளை குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சரின் இந்த அறிக்கைகள் படி.வருமான வரிச் சட்டம் 1961 நிதி (உட்பிரிவு 2) 2019 இல் சில திருத்தங்களைச் செய்து புதிய வரிவிதிப்புச் சட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 

இந்த திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: -

1) நாட்டின் வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, 2019-20 நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது, இது எந்தவொரு உள்நாட்டு நிறுவனங்களும் நிபந்தனைக்கு உட்பட்டு 22% விகிதத்தில் வருமான வரி செலுத்த அனுமதிக்கிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை 22 சதவீதமாகவும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீதமாகவும் இனிமேல் வரிகள் விதிக்கப்படும் எனவும்.

2) உள்நாட்டு உற்பத்தியில் புதிய முதலீட்டை ஈர்ப்பதற்கும். அதன் மூலம் அரசின் 'மேக்-இன்-இந்தியா' மூலம் இம் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கும், வருமான வரிச் சட்டத்தில் 2019-20 நிதியாண்டு சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, 

2019 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது, மேலும் இனிமேல் உள்நாட்டு நிறுவனங்கள் குறைந்தபட்ச வரிகள் செலுத்த வேண்டியதில்லை.

3) சலுகை வரி. சில விதிமுறைக்கு உட்டபட்டு வரி விலக்கு பெறும் நிறுவனங்கள், திருத்தப்பட்ட விகிதத்தில் தொடர்ந்து வரி செலுத்த வேண்டும் எனவும். இருப்பினும், இந்த நிறுவனங்கள் தங்கள் வரி தள்ளுபடி மற்றும் விலக்கலிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகு சலுகை வரி விதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். விருப்ப தேர்வுக்கு பிறகு இனி 22% என்ற விகிதத்தில் வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும், ஆனால் ஒருமுறை தேர்வு செய்த திட்டத்தினை மாற்ற பெற முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

4) பங்குச் சந்தையில் முதலீடு, நிதி (2) சட்டம், 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்பட்ட கூடுதல் கட்டணம். நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதால் வரும் மூலதன ஆதாயங்களுக்கு பொருந்தாது என்றும். தனிநபர், HUF, AOP, BOI மற்றும் AJP ஆகியவற்றின் படி, பங்குச் சந்தை சார்ந்த நிதி அல்லது பத்திர பரிவர்த்தனை வரி. வணிக மற்றும் அறக்கட்டளைகளின் ஒரு பிரிவாக மாற்றப்படுகிறது.

5) வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI), டெரிவேடிவ்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதால் வரும் மூலதன ஆதாயங்களுக்கு, மேம்படுத்தப்பட்ட கூடுதல் கட்டணம் இனி இருக்காது.

6) மேலும் சி.எஸ்.ஆரின் செலவினங்களில் 2% வரை நிதி. மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் காப்பகங்களுக்காக செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொது நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி கள், தேசிய ஆய்வகங்கள் மற்றும் ஐ.சி.ஏ. ஆர், ஐ. சி.எம்.ஆர், சி.எஸ்.ஐ.ஆர், டி.இ.இ, டி.ஆர்.டி.ஓ, டி.எஸ்.டி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சிஎஸ்ஆர் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட கார்ப்பரேட் வரி விகிதம் மற்றும் பிற நிவாரணங்களைக் குறைப்பதன் மூலம் நாட்டின் மொத்த வருவாய் ரூ. 1,45,000 கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், இதுபோன்ற நேரடி வரி சீர்திருத்தங்களால். உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் மதிப்பீடுகளை குறிப்பிட்ட காலத்திற்கு மேம்படுத்த உதவுகிறது.

கார்ப்பரேட் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி உட்பட மொத்த வரி விகிதம் தற்போது 25.17% ஆக இருக்கிறது.

மேலும் இந்த வரி சலுகைகள் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதலீடுகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும், நாட்டின் வருவாய் உயர வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்,

முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பிறகு மேற்கண்ட இந்த அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சரின் இந்த கார்ப்பரேட் வரி சலுகைகள் அறிவிப்புகளால். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்ந்து 38,014 புள்ளிகளிலும், நிஃப்டி 11,300 புள்ளிகளுக்கு அருகில் முடிவடைந்தது. முன்னதாக, 18 மே 2009 அன்று சென்செக்ஸ் 2111 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிஎஸ்இ மிட் கேப் 4.76 சதவிகிதமும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 2.80 சதவிகிதமும் உயர்ந்தது. ஹெரோ மோட்டோ கார்ப், மாருதி சுசுகி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் நிதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 12.50 சதவிகித லாபம் ஈட்டியது.

பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 7 முதல் 10% லாபம் ஈட்டின. இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை ஒரே நாளில் 0.35-2% இழப்பை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ யில் உள்ள அனைத்து நிறுவனங்களின் மூலதனம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 145 டிரில்லியன் உயர்ந்து மொத்த சந்தை மதிப்பு 7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மணியன் கலியமூர்த்தி