தமிழகத்தில் தேர்தல் இப்போதே பரபரப்பாகிவிட்டது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. தே.மு.தி.க. போன்ற கட்சிகள் அடுத்த கூட்டணிக்குப் போனால் கூடுதல் சீட் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
மு.க.அழகிரியை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது..!ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்குவாரா..
இந்த நிலையில் ஸ்டாலினை சீண்டி, அவ்வப்போது ட்வீட் செய்துவரும் அழகிரி இந்த தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதேபோன்று இப்போது கோவையில் அழகிரியை வரவேற்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கருணாநிதி படத்துடன், அழகிரி படத்தை வைத்து ‘‘அஞ்சா நெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது, உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர், கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கோவை பகுதியில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் அழகிரியின் சம்மதத்துடன் ஒட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், தி.மு.க.வில் அதிருப்தியாளர்கள் இருப்பதை மட்டும் தெளிவாகக் காட்டுகிறது..