ஜெகத்ரட்சகன் தற்கொலை செய்துகொள்வாரா...? ஆர்வமுடன் காத்திருக்கும் உடன்பிறப்புகள்.

முதல்வர் வேட்பாளர் என்றதும் ஜெகத்ரட்சகனுக்கு என்னமோ ஆகிப்போச்சு என்பதுதான் உடன்பிறப்புகளின் பேச்சாக இருக்கிறது. பாண்டிச்சேரியில் தி.மு.க. கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுதான் இப்போது செம ஹாட்.


பாண்டிச்சேரியில் தி.மு.க. தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அங்குள்ள ஒருசிலரின் விருப்பம். அவர்கள் அதற்காக ஜெகத்ரட்சகனை தூண்டிவிடவே, தன்னை முதல்வர் வேட்பாளராகவே நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.  

ஆழ்வார் அடிப்பொடி வீரவன்னியர் தமிழ்வேழம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஜெகத்ரட்சகன், ஏற்கனவே பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறார் என்று சொல்லப்படும் நிலையில்தான், 30 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் அப்படி ஜெயிக்கவில்லை என்றால், இந்த மேடையிலே தற்கொலை செய்துகொள்வேன் என்று வீராவேசமாகப் பேசினார்.

அப்படி அவர் "முப்பது தொகுதியில் ஜெயிப்பேன்" என்று சொல்லும்போது எழுந்த கைதட்டலைக்காட்டிலும் "இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்" என்று சொல்லும்போதுதான் பயங்கரமாய் வரவேற்று ஆரவாரமாய் விசிலடித்து மகிழ்ச்சியோடு கை தட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்.

அதன்பிறகும் பேசும் உடன்பிறப்புகள், இவரெல்லாம் பா.ஜ.க.வின் பி டீம் என்பது எங்களுக்கு நல்லாவே தெரியும். இவர் மட்டும் தற்கொலை செய்வாருன்னா, 30 தொகுதியிலும் தி.மு.க. தோற்றுவிடும் என்று கிண்டல் செய்கிறார்கள்.

அதனால்தானோ என்னவோ, ‘நான் 30 தொகுதிகளிலும் தி.மு..க. ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசவில்லை, தி.மு.க. கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் பேசினேன் என்று பல்டி அடித்திருக்கிறார்.