மிரட்டுவாரா தோனி? கலக்கத்தில் ஹைதராபாத் அணி!

IPL தொடரின் 41-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைஸ்ஸர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டமானது இவ்விரு அணியினருக்கும் மிகவும் முக்கியமானது ஆகும்.


இரண்டு தோல்விகளை தொடர்ந்து சந்தித்த சூப்பர் கிங்ஸ் அணியினர் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் விளையாடுவார்கள்.அதே சமயம் சன்ரைஸ்ஸர்ஸ் ஹைதராபாத் அணியினர் கொல்கத்தா அணியை பிரித்து மேய்ந்த உத்வேகத்தில் களம் காண்பர். இந்த ஆட்டத்தில்  எந்தவித பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

சென்னை அணிக்கு பேட்டிங் அவ்வளவு நன்றாக இல்லை. ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா ,கேதார் ஜாதவ்  ஆகியோர்  "அவுட்-ஆப் "பார்ம்மில் இருப்பது பெரிய பலவீனமாக உள்ளது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தோனி மட்டுமே ஜொலித்துக்கொண்டிருகிறார். பந்துவீச்சு நன்றாக உள்ளது.இம்ரான் தாஹிர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் 2-ம் இடத்தில உள்ளார்.

சன்ரைஸ்ஸர்ஸ் ஹைதராபாத் அணி தங்களின் தொடக்க ஆட்டக்காரர்களை மலைபோல் நம்பியிருக்கிறது. அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார்களான " டேவிட் வார்னர் மற்றும் ஜானி பைர்ஸ்டோவ் " முதலிரு இடங்களில் உள்ளனர். ஆனால் அவர்களின் மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் இதுவரை அதிகம் சோபிக்கவில்லை. பந்துவீச்சில் ரஷீத் கான் பட்டையை கிளப்பிவருகிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலிற்கு ஏற்றவாறு உள்ளதால் ரன் குவிப்பது மிகவும் கடினமாக உள்ளது.இங்கு எவ்வாறு  ஹைதராபாத் அணியினர் தாக்குப்பிடிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உள்ளூரில் ஆடுவதால் சென்னை அணியின் கை ஓங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது