யாழ்ப்பாணத்திற்கு சென்ற மனைவியை காணவில்லை என்று கணவர் புகாரளித்துள்ள சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்ட திருமணமான பெண்! பிறகு நேர்ந்த விபரீதம்! தவிக்கும் 2 பெண்கள்!
வவுனியா பகுதியில் காத்தான்கோட்டம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஜெனிதாஸ் விமலேஸ்வரி. இவருடைய வயது 39. 27-ஆம் தேதியன்று காலையில் உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்று வருவதாக தன் கணவரிடம் கூறியுள்ளார்.வவுனியா பேருந்து நிலையத்திற்கு தன்னுடைய தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால் அவர் யாழ்ப்பாணம் செல்லவில்லை. மேலும் அவருடைய செல்போன் இணைப்புகள் வவுனியா பேருந்து நிலையத்திற்கு அருகே துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த ஜெனிதாஸின் கணவர் உறவினர்களுடன் பல இடங்களில் அவரை தேடி அலைந்துள்ளார்.
ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து விரக்தியில் காவல் நிலையத்தில் ஜெனிதாஸின் கணவர் புகாரளித்தார். மேலும் தன் மனைவியைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தனக்கோ அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் முறையிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது வவுனியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.