தம்பி முறை இளைஞருடன் மனைவிக்கு வயதை மீறிய தகாத உறவு! கண்டுபிடித்த கணவன் அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள பள்ளிபாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கும் தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

திருக்கோவிலூரில் சிவகுமார் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.  அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் தமிழ்செல்வி ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது தமிழ் செல்விக்கும் அவருடைய உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் தமிழ்ச் செல்விக்கு தம்பி முறை என்று கூறப்படுகிறது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டுள்ளனர்.

இதனை அறிந்த சிவகுமார் தன் மனைவி தமிழ்செல்வி கண்டித்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தமிழ்ச்செல்வி சிவகுமார் உடனான தொடர்பை முறித்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் தமிழ்செல்வியை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி திருக்கோவிலூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்செல்வியை சிவகுமார் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.  உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பொதுமக்களில் சிலர் சிவக்குமாரை மடக்கிப்பிடித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இந்த சம்பவமானது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.