மனைவியை அபகரித்த காதலன்! ரூ.5 கோடி செட்டில்மென்ட் பெற்ற கணவன்! பகீர் சம்பவம்!

மனைவியின் முன்னாள் காதலன் அவரை அபகரித்து சென்றதால் வழக்கு போட்ட கணவன் 5 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் கெவின் ஹோவார்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இவருடைய மனைவியின் பெயர் கரோலினா. இந்நிலையில் கெவின் அதிக நேரம் உழைத்து கொண்டிருப்பதாகவும், குடும்பத்திற்காக நேரம் செலவழிக்கவில்லை என்றும் கூறி இவருடைய மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். 

திடீரென்று தன் மனைவி விவாகரத்து கேட்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஹார்வோர்ட் முடிவெடுத்தார். தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பாளரை வரவழைத்து நிகழ்ந்ததை கூறியுள்ளார்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது கரோலினா தன்னுடன் பணியாற்றும் நபர் ஒருவரை காதலிப்பதாகவும். அவரை ஏற்கனவே தன் வீட்டிற்கு வரவழைத்து மகிழ்ந்து கலந்துரையாடவுள்ளதாகவும் தனியார் துப்பறிவாளர் கண்டுபிடித்தார்.

இதனால்தான் கரோலினா விவாகரத்தை கேட்பதாக அவர் கெவினிடம் கூறியுள்ளார். உடனடியாக கெவின் தன்னுடைய மனைவியான கரோலினாவை எதிர்த்து "பாசம் காட்டுவதில் இருந்து விலகுதல்" என்ற பிரிவின்கீழ் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பிரிவானது அமெரிக்கா நாட்டிலுள்ள ஹவாய், மிஸ்ஸிசிப்பி, நியூ மெக்ஸிகோ, தென் டகோடா, உடா, வட கரோலினா ஆகிய 6 மாகாணங்களில் மட்டுமே இன்றளவும் நீடித்து வருகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரோலினாவும், அவருடைய காதலரும் 7.5 லட்சம் டாலர்கள் கெவீனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். "திருமணம் என்பது புதினமானது" என்பதை வலியுறுத்தவே கெவின் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.