வெளிநாட்டு கணவனுடன் போனில் பேசிய அடுத்த நிமிடம்..! மாடிக்கு சென்று தூக்கில் தொங்கிய மனைவி..! தவிக்கும் 2 குழந்தைகள்! திருவாரூர் அதிர்ச்சி!

கணவருடன் செல்போனில் பேசுவதற்காக என்ற மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே  ஆதிரங்கம் அங்காள பரமேஸ்வரி கோவில் தெரு என்ற இடம் அமைந்துள்ளது.  இங்கு உஷா என்ற 33 வயது பெண் வசித்து வந்துள்ளார். அவருடைய கணவரின் பெயர் பிரபாகரன். இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பிரபாகரன் வேலை நிமித்தமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார். உஷா குழந்தைகளுடன் அரங்கத்தில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று உஷா தன்னுடைய கணவரான பிரபாகரனுடன் நெடுநேரம் செல்போனில் உரையாற்றியுள்ளார்.

பேசி முடித்துவிட்டு உஷா மாடியில் உள்ள தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். நெடுநேரமாகியும் உஷா கீழே இறங்கி வராத காரணத்தினால், சந்தேகித்த பெற்றோர் மாடி அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தகவலறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உஷாவின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்த தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.