வெளியே சென்றுவிட்டு திடீரென வீடு திரும்பிய கணவன்! படுக்கையில் வேறு ஒருவனுடன் இருந்த மனைவி! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

வீடு திரும்பியபோது வேறொருவருடன் படுக்கையிலிருந்த மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவமானது மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோவில் தெஹுயாண்டிபெக் என்ற நகரில் லீசா எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஒஸ்மரா மார்ட்டினெஸ் என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்பான்சோ என்ற இளைஞனுடன் திருமணமாகியது. தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 

இதனிடையே அல்பான்சோ சில நாட்களுக்கு முன்னர் வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, மார்ட்டினெஸ் வேறொரு இளைஞருடன் படுக்கையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை கண்டு கடும் ஆத்திரமடைந்த அவர் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன் மனைவியை சுட்டு கொன்றுள்ளார்.

அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மார்ட்டினெஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு அல்பான்சோ தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 

காவல்துறையினர் அல்போன்சா கைதுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சம்பவத்தன்று அல்ஃபோன்சோ மது அருந்தியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவமானது மெக்சிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.