கணவனை பயமுறுத்த இளம் மனைவி செய்த விபரீத செயல்! வினையாகி உயிரே போன பரிதாபம்! அதிர வைக்கும் சம்பவம்!

கணவரை மிரட்டுவதற்காக தீக்குளிக்க முயன்ற மனைவி எதிர்பாராவிதமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவமானது திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரில் திருமுல்லைவாயில் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட நாகம்மை நகரை சேர்ந்தவர் அனிதா. இவர்கள் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது சில தினங்களில் காதலாக மாறியது. இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மதுரவாயல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வந்தனர்.

இந்நிலையில் அனிதாவின் தந்தை 5 மாதங்களுக்கு முன்னால் இறந்துபோனார். தன் தாய்க்கு உதவிகரமாக இருப்பதற்காக அனிதா தன் கணவருடன் தாய் வீட்டிற்கு குடியேறியுள்ளார். வினோத் குமாருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் இரவுநேரத்தில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து ரகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அனிதா மிகவும் மனமுடைந்தார்.

தன் கணவரை திருத்த வேண்டும் என்பதற்காக தீக்குளிப்பு இதுபோன்று பயமுறுத்த நினைத்துள்ளார். உடலில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு பயமுறுத்தி கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக அனிதா மீது தீ பற்றியது.

அக்கம் பக்கத்தினர் அனிதாவை காப்பாற்றி கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஒருவாரகாலமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அனிதா தீக்குளித்து எறிந்து கருப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.