ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற புது மனைவி வேறு இளைஞருடன் ஓட்டம்! விரக்தியில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!

மனைவி முன்னாள் காதலனுடன் ஓடிவிட்ட விரக்தியில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது நாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் எனும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதிக்கு அருகேயுள்ள அருவிழமங்கலத்திலுள்ள ஆற்றங்கரை தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் பாக்கியராஜ். இவருடைய வயது 35. இவர் விவசாயம் பயின்று வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நாககுடி கிராமத்தை சேர்ந்தவர் கௌசல்யா. இவருடைய வயது 19. 40 நாட்களுக்கு முன்னர் பாக்கியராஜுக்கும் கௌசல்யாவுகும் திருமணம் நடைபெற்றது. 

கௌசல்யா ஏற்கனவே அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞனை காதலித்து வந்துள்ளார். தன் காதலை அவர் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் பெற்றோர் அவருடைய காதலை ஏற்க மறுத்துவிட்டனர். கௌசல்யாவின் விருப்பத்திற்கு மாறாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆடி மாதத்திற்காக கவுசல்யாவை சொந்த ஊருக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அப்போது யாருக்கும் தெரியாமல் தன்னுடைய முன்னாள் காதலனை சந்தித்துள்ளார். இருவரும் நெடுநேரம் உரையாடி இணைந்து வாழ்வது என்று திட்டமிட்டனர்.

அவர்கள் இருவரும் முடிவெடுத்து ஊரைவிட்டு ஓடிவிட்டனர். கௌசல்யாவின் பெற்றோர் நெடுநேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பிறகுதான் தன் முன்னாள் காதலனுடன் அவர் ஓடிவிட்டார் என்பதனை கண்டுபிடித்தனர்.

தன் மனைவி முன்னாள் காதலனுடன் ஓடிவிட்ட செய்தியை அறிந்த பாக்கியராஜ் மிகவும் மனமுடைந்து விட்டார். தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயல்வெளியில் கழிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வாயில் நுரை தள்ளிய வாறு உயிருக்கு போராடிகொண்டிருந்த பாக்யராஜை நாகை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவமறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.