திருமணமாக 45 நாட்கள்! காதலியுடன் தனிக்குடித்தனம் சென்ற இளம் மனைவி! லெஸ்பியன் கொடுமை! தவிக்கும் கணவன்!

திருமணமான புதுப்பெண் நகைகளை எல்லாம் சுருட்டிக்கொண்டு தோழியுடன்  ஓடியுள்ள சம்பவமானது சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சானாஊரணி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வனிதா என்ற 19 வயது பெண்ணுக்கும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான சிலநாட்களிலேயே ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாக சென்றார். தனியாக இருந்த வினிதாவுக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது.

அபி எப்பொழுதும் வீடியோக்களை டிக்டாக் செயலில் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்‌. அந்த வீடியோக்கள் வினிதாவுக்கு மிகவும் பிடித்துப்போயின. இதனால் இருவருக்குள்ளும் மிகவும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் டிக்டாக் செய்துகொள்ள தொடங்கினர்.

இவர்களுடைய டிக் டாக் வீடியோக்களை பார்த்து வந்த லியோ வினிதாவை கண்டித்துள்ளார். ஆனால் அதுகுறித்து வினிதா கவலைப்படவில்லை. தொடர்ந்து அபியுடன் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

சில நாட்கள் கழித்து வெளியான டிக்டாக் வீடியோக்களில் வினிதாவின் கையில் அபியின் புகைப்படம் டாட்டூவாக குத்தப்பட்டிருந்ததை கண்டு லியோ அதிர்ச்சியடைந்தார்.

தன் மனைவி போகும் போக்கு சரியில்லை என்பதை உணர்ந்து இல்லையோ உடனடியாக சிவகங்கை திரும்பினார். அப்போது வீட்டிற்குள் அடி வாங்கி கொடுத்த பரிசுப்பொருட்கள் ஏராளமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் மாதந்தோறும் தான் அனுப்பும் பணமும், வினிதா திருமணத்தின் போது அணிந்து வந்திருந்த 20 பவுன் நகைகள் வீட்டில் காணாததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து வினிதாவிடம் கேட்டு போது இருவருக்குள்ளும் தகராறு வெடித்தது.

பின்னர் லியோ வினிதாவின் பெற்றோரின் வீட்டிற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். 19-ஆம் தேதியன்று வினிதா திடீரென்று மாயமானார். அப்போது வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

சம்பவம் குறித்து லியோ அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.