10 வருடங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் சொந்த ஊர் வந்த மனைவி! நேரில் பார்த்த கணவன்..! பிறகு நேர்ந்த கொரோனா கொடூரம்!

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி பத்து வருடங்களுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உசிலம்பட்டிக்கு அருகே பெரியவாகைக்குளம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் செல்வி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே திருமணமான சில ஆண்டுகளிலேயே செல்வி அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்தார். பின்னர் இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

அங்கு இருவரும் கணவன்-மனைவி போன்று இணைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு பனியன் கம்பெனியில் இணைந்து இருவரும் பணிபுரிந்து வந்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலினால் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆகையால் இந்த கள்ளக்காதல் தம்பதியினரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். 

மீண்டும் இவர்கள் ஊருக்கு வருவதை தெரிந்துகொண்ட செல்வியின் உறவினர்களான கதிரேசன் மற்றும் அருண்குமார் செல்வியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி தங்களுடைய கூட்டாளிகளுடன் இணைந்து, இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்வி உயிரிழந்தார்.

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக  மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.