பலமுறை அழைத்தும் குடும்பம் நடத்த வரமாட்றா..! மனைவி மீதான ஏக்கத்தில் இளைஞர் செய்த நெஞ்சை உலுக்கும் செயல்! அதிர்ச்சி சம்பவம்!

மனைவி பிரிந்து சென்ற துக்கத்தை தாங்க இயலாத கணவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமானது ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை என்ற கிராமம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட நடுத்தெரு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் மனைவியிடையே படம் தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன.

2 ஆண்டுகளுக்குமுன் ஜீவானந்தத்தின் மனைவி அவரைவிட்டு பிரிந்து தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றார்‌. கடந்த 2 ஆண்டுகளாக ஜீவானந்தம், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். திடீரென்று ஜீவானந்தம் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார். 

அப்பகுதியில் இருந்த நான் சுவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி ஜீவானந்தம் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறியுள்ளார். அப்போது இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இலவசமாக அவர்கள் வருவதற்குள்ளேயே மின்சாரம் தாக்கி ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார். இதனால் காவல்துறையினர்  மின்னூழியர்களின் உதவியுடன், மின் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட ஜீவானந்தத்தின் உடலை பெற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கலவை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.