பிள்ளை வேணும்னு தான கேட்ட இந்தா பிடி..! 2வயது குழந்தையின் சடலத்தை கணவனிடம் கொடுத்து அதிர வைத்த லாவண்யா! ஜோலார்பேட்டை திகில்!

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் குழந்தையை கொலை செய்துள்ள சம்பவமானது திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள இதயம் நகர் என்ற இடத்தில் சக்திவேல் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 21. இவர் லாவண்யா என்ற பெண்ணை 3 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு சவினா என்ற 2 வயது குழந்தையும் உள்ளது.

இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று சமீபகாலத்தில் லாவண்யா சக்திவேலிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சக்திவேல் தன் தாய் மட்டும் இருப்பதால் தனிக்குடித்தனம் வர இயலாது என்று மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்னர், லாவண்யா குழந்தையை தூக்கி கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் லாவண்யாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது.  அப்போதிலிருந்து குழந்தையை தன்னுடன் அழைத்து செல்வதற்காக சக்திவேல் மிகவும் போராடியுள்ளார். ஆனால் லாவண்யா குழந்தையை திருப்பி தர ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு லாவண்யா மற்றும் அவரது தாயார் சாந்தி இருவரும் வாகனத்தில் ஜோலார்பேட்டை அருகே வந்து குழந்தை இறந்துவிட்டதாக கூறி குழந்தையை கொடுத்துள்ளனர். மிரண்டுபோன சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை பார்த்த போது பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது போன்று தோற்றமளித்துள்ளது. 

உடனடியாக சக்திவேல் நிகழ்ந்தவற்றை கூறி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்தார். குழந்தையை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.