திருமணமாகி நான்கே மாதம்! பிரிந்து சென்ற மனைவி! ஏக்கத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு! புதுச்சேரி பரபரப்பு!

மனைவி பிரிந்து சென்ற தூக்கிட்டு கொண்ட சம்பவமானது புதுச்சேரி எல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி-தமிழகம் எல்லை பகுதிக்கு அருகே கோட்டகுப்பம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு உட்பட்ட மோசார் வீதியில் முகமது யூசுப் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் தியாகுல் ஹக். அவருடைய வயது 34. இவருடைய அண்ணனின் பெயர் காதர் மொய்தீன். கார் ஓட்டுநராக அந்த சுற்றுவட்டாரத்தில் பணியாற்றி வருகிறார். 

இதனிடையே இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கின.

இதனால் திருமணமான 4 மாதங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். தியாகுல் தன்னுடைய சகோதரரான காதர் மொய்தீனின் வீட்டில் வசித்து வந்தார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கடல் சோகத்திலிருந்த தியாகுல் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.

அளவுக்கு அதிகமாக தியாகுல் குடித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், தியாகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்க கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் கோட்டகுப்பம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தியாகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கோட்டகுப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.