புருசன் நான் இருக்கும் போது, என் மனைவியுடன் நீ யாருடா..! வீட்டுக்குள் நுழைந்த கணவன் செய்த பயங்கர சம்பவம்! திருவள்ளூர் திகில்!

மனைவி வேறொருவருடன் வாழ்வதை தெரிந்து கொண்ட கணவர், கள்ளக்காதலரை கொலை செய்துள்ள சம்பவமானது திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கேசவபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சபரிதா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரின் பெயர் பசுபதி. திருமணமான புதிதிலிருந்தே கணவன் மனைவியிடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் சபரிதா, பசுபதியை பிரிந்து வாழ தொடங்கினார். 

அப்போது ராயபுரத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்பவருக்கும், சபரிதாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த செய்தி பசுபதிக்கு தெரியவந்தது.

ஆத்திரமடைந்த பசுபதி கணேஷ்குமாரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார். அதன்படி சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கணேஷ்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் இணைந்து கணேஷ்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். சம்பவயிடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கணேஷ்குமார் உயிரிழந்தார். 

கொலை குறித்து தகவலறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து கணேஷ்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பசுபதி மற்றும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.