தூங்கிக் கொண்டிருந்த கணவனின் ஆண் உறுப்பில் சுடச்சுட பால் ஊற்றிய மனைவி..! அதிர வைக்கும் காரணம்! புதுச்சேரி பகீர்!

புதுச்சேரியில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆணுறுப்பில் அவரது மனைவி சுடச்சுட பால் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வியாழக்கிழமை அன்று புதுச்சேரியை சேர்ந்த 35 வயது மிக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவரிடம் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சுடச்சுட இருந்த பாலை அவரது ஆணுறுப்பில் ஊற்றி இருக்கிறார். உறங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர் அலறியடித்துக்கொண்டு வலியால் துடிதுடித்து இருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து நடைபெற்ற போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 18 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் இந்தப் பெண் நிற்கும் வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் இரண்டு மகள்களும் முதியாள்பெட் என்ற இடத்தில் அவரது தாயுடன் வசித்து வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் தனியாக அயிரான்குப்பம் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஓராண்டு காலமாக இவர்கள் இருவரும் பிரிந்து இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அந்தப் பெண், அவரது கணவருக்கு போன் செய்து இருக்கிறார். போனில் அவரிடம் தான் வசித்து வரும் வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண், தன்னுடைய அக்காவிடமிருந்து பணத்தை கடனாகப் பெற்று தருவதாகவும் அந்த பணத்தின் மூலம் படகு ஒன்றை வாங்கிக் கொள்ளுமாறு தன்னுடைய கணவரிடம் கூறி இருக்கிறார். அந்த படகை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை மீண்டும் செய்யுங்கள் என்றும் அவர் தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தன் மனைவி கூறிய வார்த்தைகளை நம்பி அவரும் முதலியார் பெட்டில் இருக்கும் அந்த பெண்ணின் அக்கா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்பொழுது அந்தப் பெண்ணின் அக்கா கடன் தருவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார், ஆனால் நான் கடன் தர வேண்டும் என்றால் நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் தனக்கு மனைவியோடு சேர்ந்து வாழ விருப்பம் தான் ஆனால் அவள் வேறு யாருடனும் எந்த கள்ளதொடர்பிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து வாழவும் சம்மதித்துள்ளனர்.

இந்நிலையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது கணவருக்கு பாடம் கற்பிக்க நினைத்த அந்தப் பெண், கட்டிய கணவன் என்றும் பாராமல் அவரது ஆணுறுப்பில் மிகவும் சூடாக இருந்த பாலை ஊற்றி இருக்கிறார். இதனால் அந்த நபர் வலியில் துடித்துக் கதறி அழுதிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.