தன்னுடைய கணவரின் கள்ளக்காதலியை பெற்ற பிள்ளைகளின் மூலம் மனைவி கொலை செய்த சம்பவமானது நடுப்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையுடன் தவறான உறவில் இருந்த இளம் பெண்..! கண்டுபிடித்து போட்டுத் தள்ளிய 2 மைனர் மகன்கள்..! கம்பம் பகீர்!
நடுப்பட்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் பேயோட்டும் மந்திரவாதியாக பணியாற்றி வருகிறார். இதனுடைய வேலை நிமித்தமாக பல முறை இவர் தேனிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருடைய மனைவியின் பெயர் திலகம். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அவ்வாறு சென்று வந்தபோது இவருக்கும் ரத்தினம் என்ற பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ரத்தினம் ஒரு கைம்பெண்ணாவர். அடிக்கடி ரத்தினத்துடன் குமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விவகாரமானது திலகத்துக்கு தெரியவந்தது. அவர் பலமுறை குமாரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் குமார் தொடர்ந்து திலகத்துடன் நெருக்கமாக பழகி வந்ததால் கோபித்துக்கொண்டு திலகம் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட குமார் இரத்தினத்தை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார். இது திலகத்தை மேலும் ஆத்திரம் அடைய செய்தது. தன்னுடைய மகன்கள் இருவரிடம் யாரும் இல்லாத நேரத்தில் ரத்தினத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதன்படி மகன்கள் இருவரும் யாரும் இல்லாத நேரத்தில் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். கொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் காவல்துறையினரிடம் சிக்கி கொண்டனர். எங்க விசாரணையில் இவர்களுடைய தாயும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவமானது நடுப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.