படுக்கை அறையில் வைத்து மனைவி கணவனை கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கி கொண்டிருந்த கணவனுக்கு கழுத்தில் சதச் சதக்! நள்ளிரவில் மனைவி அரங்கேற்றிய கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

மராட்டிய மாநிலத்தில் நல்லோஸ்பரா எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சுனில் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 36. இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த பர்னாளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. பர்னாளியின் வயது 33. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட தொடங்கின. கருத்து வேறுபாடுகள் அதிகரித்து இவருக்கும் இடையே பலத்த சண்டைகள் ஏற்பட்டு வந்தன.
சம்பவத்தன்று அதிகாலையில் வழக்கத்தை போன்று அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பில் முடிந்தது. பர்னாளியை சுனில் கடுமையாக தாக்கினார். ஆத்திரமடைந்த பர்னாளி சமையல் கத்தியால் சுனிலின் உடலில் சரமாரியாக குத்தியுள்ளார். வலியால் சுனில் கத்திவிடக்கூடாது என்பதற்காக தொண்டையில் ஆழமாக குத்தினார்.
சுனில் உயிரிழந்த பிறகு வெளியே இருந்த அவரின் பெற்றோரிடம் சுனில் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அழுது புலம்பியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பர்னாளியிடம் விசாரணையை தொடங்கினர். காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டி கொண்ட அவர், "தன் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அதனை முடித்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அதனால் வேறு வழியின்றி அவரை கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
பர்னாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மராட்டிய மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.