கணவனை வெட்டி கூறு போட்ட பாண்டியம்மா! சடலத்துடன் பிறகு செய்த அதிர வைத்த சம்பவம்!

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவரை அரிவாளால் வெட்டி மனைவி கொலை செய்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பரமக்குடியில் பாலன் நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கே முனியாண்டி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 60. இவருடைய மனைவியின் பெயர் பாண்டியம்மாள். அவரின் வயது 55. கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. முனியாண்டிக்கு மதுப்பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டவர். இதேபோன்று நேற்று முனியாண்டி மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம் போல தன் மனைவி பாண்டியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றது. முனியாண்டி பாண்டியம்மாளை கடுமையாக தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் அரிவாளால் முனியாண்டியை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

எதுவும் நடக்காதவாறு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வீட்டுவேலைகளை மும்மரமாக செய்து வந்தார். ஆனால் இவருடைய பழக்கவழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது முனியாண்டி ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு நடுங்கினர்.

பின்னர் பாண்டியம்மாள் கணவனை வெட்டிய அரிவாளுடன் பரமக்குடி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அப்பகுதி காவல்துறையினர் பாண்டியம்மாளின் வீட்டிற்கு விரைந்து வந்து முனியாண்டி என் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.