சாப்பாட்டில் விஷம்! படுக்கையை சுற்றிலும் ஆணுறை! கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கொடூரம்!

கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து மனைவி கொலை செய்துள்ள சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிராவின் புறநகரில் தானே எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பிரமோத்  என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 43. இவருடைய மனைவியின் பெயர் தீப்தி. திட்டத்தின் வயது 36. இந்நிலையில் தீப்திக்கும், அதே பகுதியை சேர்ந்த உத்தவ் பஜான்கர் என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருக்கமானது கள்ளக்காதலாக மாறியது. சில மாதங்களிலேயே பிரமோத் இதனை கண்டு பிடித்துள்ளார். தன் மனைவியான தீப்தியை பிரமோத் கடுமையாக கண்டித்துள்ளார். இருப்பினும் தீப்தி, உத்தவ் உடனான கள்ளத்தொடர்பைக் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

தீப்தி தன் கணவர் பிரமோத் தன்னுடைய கள்ளக்காதலுக்கு தடங்கலாக இருப்பதாக எண்ணினார். அவரும் உத்தவும் இணைந்து பிரமோதை கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த 15-ஆம் தேதியின் இரவன்று பிரமோத் குடித்த தேநீரில், தீப்தி அதிக அளவில் தூக்க மாத்திரைகளை கலந்து குடிக்க செய்துள்ளார்.

குடித்த சில மணி நேரத்திலேயே பிரமோத் உயிரிழந்துள்ளார். தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக தீப்தி பிரமோத் குடித்த டீ கப்பில் லிப்ஸ்டிக் ஒட்டியிருந்தார். மேலும் அவருடைய படுக்கையின் கீழ் பலவிதமான ஆணுறைகளை மறைத்து வைத்திருந்தார்.

காவல்துறையினர் விசாரணை நடத்தும் தருவாயில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு கொண்ட இறந்ததாக என்ன வேண்டும் என்று தீப்தி இவ்வாறு செய்திருந்தார்.ஆனால் காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையை தாக்குப் பிடிக்க இயலாமல் கணவனை கொலை செய்ததை தீப்தி ஒப்புக்கொண்டுள்ளார். 

தீப்தி மற்றும் உத்தவ்வை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.