புருசன் தூங்கிட்டான் நீ வா..! கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து மனைவி அரங்கேற்றிய பகீர் சம்பவம்! கும்மிடிப்பூண்டி பரபரப்பு!

கும்மிடிப்பூண்டி பகுதியில் கள்ளக்காதலனை வைத்து கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.


கும்மிடிபூண்டி பகுதியில் உள்ள சுண்ணாம்பு குளம் என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளைமேடு உள்ள பகுதியில் முருகன் ,தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் .

கடந்த 12ஆம் தேதி தேவியின் கணவர் முருகன் இரவில் வீட்டுக்குள்ளயே கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது மனைவி அவருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.த கவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கணவர் முருகனின் மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆரம்பத்தில் கூறிவந்தார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின் தேவி , தனது கள்ளக் காதலன் வினோத்தை வைத்து தன் கணவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு விட்டார் .

இதுகுறித்து போலீசாரிடம் தேவி அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் அந்த பகுதியில் வசித்து வந்த வினோத் என்பதற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. என் கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலன் வினோத்தை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பேன் . இதுகுறித்து என் கணவர் முருகனுக்கு விஷயம் தெரிந்ததும் என்னை அவர் கண்டித்தார். 

இதனால் எங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த எனது கணவரை கொலை செய்ய நானும் வினோத்தும் முடிவு செய்தோம். கடந்த 12ஆம் தேதி இரவு குடிபோதையில் வந்து எனது கணவர் உறங்கினார். இதுதான் அவரை தீர்த்துக்கட்ட சரியான தருணம் என்று எண்ணி எனது கள்ளகாதலன் வினோத்திற்கு நான் போன் செய்து எனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். தனது மகள் தன்னுடன் வர மறுத்ததால் அவளை வீட்டிலேயே விட்டு சென்றுவிட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

பின்னர் எனது வீட்டுக்கு வந்த எனது கள்ளக்காதலன் வினோத் தூங்கியிருந்த எனது கணவரை வெட்டி கொலை செய்து விட்டார் என்று தேவி வாக்குமூலத்தில் கூறியிருந்தார் .கொலை செய்த கள்ளக்காதலன் வினோத் கொலை நடந்த அடுத்த நாளே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வினோத்தின் உடல்நிலை சரியானதும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையின்போது வீட்டிலிருந்த தேவி முருகன் தம்பதியினரின் மகள் , கொலையாளி வினோத்தை அடையாளம் காட்டியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவியும் கள்ளக்காதலன் வினோத்தும் எட்டு மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு ஓட முயற்சி செய்துள்ளார்கள். போலீசார் இவர்களை மீட்டு கணவருடன் தேவியை அனுப்பி வைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.