குத்துக்கல் போல கணவன் இருக்கும் போது ஆண் நண்பனுடன் சேர்ந்து மனைவி செய்த தகாத செயல்! ஆதாரமான பேஸ்புக் பக்கம்! திருச்சி அதிர்ச்சி!

திருச்சி மாவட்டத்தில் கணவரை பழிவாங்குவதற்காக அவரது பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து வேறு சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் விதமாக புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ள மனைவியின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திருச்சி மாவட்டத்தில் பாலக்கரை காஜியார் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் மோகன் ஜெய் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் தாட்சாயணி என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தது காரணத்தால் தாட்சாயணி தன் கணவரிடம் கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இருப்பினும் அடிக்கடி அவரது கணவருக்கு போன் செய்து சண்டையிட்டு வந்திருக்கிறார். பொதுவாகவே மோகன் ஜெய்கணேஷ் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் பேஸ்புக்கில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது திருமண புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மோகன் ஜெய்கணேஷ். திருமண புகைப்படங்களை தனது கணவர் பதிவிட்டதை பாரதத்தாய் சைனி அவருக்கு உடனடியாக தொடர்பு கொண்டு திருமண புகைப்படங்களை நீக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு மோகன் ஜெய்கணேஷ் நீ என்னை விட்டு பிரிந்து இருந்தாலும் நீ தான் என்னுடைய மனைவி ஆகையால் அதை நீக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதனால் தாட்சாயணி ஆத்திரம் அதிகரித்துள்ளது. உடனே அவர் தன்னுடைய கணவனை பழிவாங்க வேண்டுமென்று தொடுத்திருக்கிறார். இதனை அடுத்து தன்னுடைய கல்லூரி நண்பரான கிருபாகரன் என்பவரை தொடர்பு கொண்டிருக்கிறார். கிருபாகரன் தஞ்சை மாவட்டத்தில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். கணவரின் பேஸ்புக் பாஸ்வேர்ட் தெரிந்ததால் இவர்களது வேலை சுலபமாகி உள்ளது. அதாவது கிருபாகரன் தாட்சணியும் இணைந்து தனது கணவர் புகைப்படத்துடன் வேறு சில பெண்களின் ஆபாச புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து மோகன் ஜெய்கணேஷ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதனையடுத்து மோகன்ராய் கணேஷ் தன்னுடைய மனைவியின் மீது பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை செய்ததில் கிருபாகரன் மற்றும் தாட்சாயணி ஆகிய இருவரும் இணைந்து ஆபாச புகைப்படங்களை ஜெய கனேஷ் புகைப்படத்தோடு மார்பிங் செய்து பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கிருபாகரன் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தாட்சாயணியும் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.