திருமணமாகி நான்கே மாதம்..! இரவு கணவன் செய்த விபரீத செயல்! காலையில் சடலமாக கிடந்த புதுமணப்பெண்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்குப் பின்பு கணவர் வேலைக்கு செல்லாததால் மனமுடைந்த மனைவி திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜான்சி மற்றும் சாய் தேஜா ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர் . இவர்களது காதல் இருவீட்டாருக்கும் திருப்தி அளிக்க வில்லை. ஆகையால் அவர்கள் அனைவருமே இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜான்சி மற்றும் சாய் தேஜா ஆகிய இருவரும் இணைந்து அவர்களது வீட்டாருக்கு தெரியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். ஆகையால் இவர்கள் இருவரையும் உறவினர்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேற்றினர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரையும் ஏற்றுக்கொண்ட அவர்களது பெற்றோர் அவர்களை தங்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

சாய் தேஜா அவர்களது வீட்டில் ஒரே ஒரு மகன். மிகவும் செல்லமாக வளர்ந்த மையால் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். இதனையடுத்து சாய் தேஜாவின் பெற்றோர் அவரை வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறியிருக்கின்றனர். பின்னர் ஜான்சியும் அவரது கணவரை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியிருக்கிறார் .இதனைக் குறித்து பலமுறை அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்களன்று சாய் தேஜாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது சாய் தேஜாவையும் உடன் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் சாய் தேஜா குறித்த நேரத்திற்கு வராமல் சற்று தாமதமாக வந்திருக்கிறார் . தாமதமாக வந்தமையால் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பிரச்சினையின் எதிரொலியாக உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவி ஜான்சியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் மனமுடைந்து போன ஜான்சி செய்வதறியாது சோகத்தில் மூழ்கி இருந்திருக்கிறார். யாரும் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து தன் அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஜான்சியின் தற்கொலையை அடுத்து போலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜான்சியின் தற்கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.