கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை வாலிபர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவமானது தேன்கனிக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்கு செல்லும் போது பழக்கம்! உல்லாசம்! திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்! அதிர்ச்சியில் கணவன்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட கூட்டூர் கிராமத்தில் எல்லப்பா என்பவர் வசித்துவந்தார். இவருடைய மகளின் பெயர் சுகுணா. சுகுணாவின் வயது 22. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடைபெற்று விட்டது.
இந்நிலையில் கணவனுடன் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். பெற்றோர் வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்த சுகுணாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது தனிமையிலும் இருவரும் வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக சுகுணா கர்ப்பமானார். 5 மாத கர்ப்பிணியாக உள்ள சுகுணா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேணுகோபாலிடம் முறையிட்டுள்ளார்.
நிகழ்ந்தவற்றை வேணுகோபால் தன்னுடைய அண்ணனான கோபிநாத்திடம் கூறியுள்ளார். கோபிநாத் நேரடியாக சுகுணா விடம் சென்று இனி வேணுகோபால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையை விட்டு விடு. திருமணமாகாத வேணுகோபால் அடைய இனி முயற்சி செய்யாதே என்று கூறி மிரட்டியுள்ளார்.
மனமுடைந்த சுகுணா நிகழ்ந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோரின் உதவியுடன் கெலமங்கலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி, வேணுகோபால் மற்றும் கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாரளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கெலமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.