கணவனை கொன்ற மனைவி, காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகாரளித்த சம்பவமானது நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் யாரும் இல்லை என நினைத்து உறவு கொண்டோம்! என் கணவர் வந்துவிட்டார்! அதனால் தான்? ஆண் நண்பருடன் இளம் மனைவி கொடுத்த பகீர் வாக்குமூலம்!

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் சடலமொன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது இறந்து கிடந்த தான் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் பிறகு காவல் துறையினர் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கினர்.
22.7.2019 நாளில் தன்னுடைய கணவரை காணவில்லை என்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த 34 வயதான சுதா என்ற பெண் புகார் அளித்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின்போது சுதா முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் சந்தேகித்த காவல்துறையினர் அந்த மாதம் சுதா தன்னுடைய செல்போனில் இருந்து பேசிய அனைத்து அழைப்புகளையும் ட்ரேஸ் செய்தனர். அப்போது, அவர் சிவராஜ் என்பவருடன் நெருங்கி பழகி வந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக இருவரையும் தனித்தனியாக காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது சுதா இருவரும்தான் கணவரை கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். சுதாரித்த வாக்குமூலமானது: மேற்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு மோகன் என்ற 13 வயது மகனும், சக்கரபாணி என்ற 9 வயது மகனும் உள்ளனர். என்னுடைய கணவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயக்கப்படும் பேருந்துகளின் நிர்வாகப்பணி மேலாளராக பணியாற்றி வந்தார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அவர் வீட்டிற்கு வருவார். அவ்வாறு அவர் ஒருமுறை வருகை தந்திருந்த போது தன்னுடைய உதவியாளர் என்று சிவராஜ் என்பவரை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அடிக்கடி சிவராஜ் எங்களுடைய வீட்டிற்கு வந்து போனார். அவருக்குத் தேவையானது அவ்வப்போது வீட்டிலிருந்து எடுத்துச்செல்லும் பணியை சிவராஜ் மேற்கொண்டிருந்தார்.
காலம் செல்ல செல்ல எங்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. காலையில் சிவராஜ் என்னுடைய குழந்தைகளை பள்ளியில் விட்டவுடன், நாங்கள் இருவரும் வீட்டை உல்லாசமாக இருந்தோம். இதுகுறித்து நாளடைவில் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் என்னுடைய கணவரிடமும் கூறினர். ஆனால் என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக குற்றச்சாட்டுகளை அவர் பெரிதாக்கவில்லை.
இருப்பினும் ஒருநாள் திடீரென்று நள்ளிரவில் பெரம்பலூரில் இருந்து என்னுடைய கணவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது நானும் சிவராஜும் உல்லாசமாக இருந்தோம். அதனை கண்டவுடன் என்னுடைய கணவர் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேறு வழியின்றி நானும் சிவராஜும் என்னுடைய கணவரை கொலை செய்தோம். நீண்ட யோசனைக்கு பிறகு முந்திரி தோப்பிற்கு என்னுடைய கணவரின் சடலத்தை தூக்கி சென்றோம்.
ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதிலும் ஊற்றி உடலை எரித்தோம். 9 மாதங்களாக நிம்மதியாக இருந்த போது காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.