காதல் கணவனையும் பெற்ற மகனையும் கொன்று புதைத்த இளம் மனைவி! அதிர வைக்கும் காரணம்!

வேலூர் மாவட்டத்தில் கணவன் மற்றும் பிள்ளையை காணவில்லை என்று கூறி ஒரு பெண் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூரை அடுத்துள்ள ஆற்காடு பகுதியில் தாஜ்புரா மந்தைவேளி என்ற இடம் அமைந்துள்ளது. அங்கு எலக்ட்ரீசியனாக ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபிகா என்ற  பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தீபிகா திடுக்கிடும் புகார் ஒன்றை காவல்நிலையத்தில் நேற்று அளித்துள்ளார். அதாவது கடந்த 13-ஆம் தேதி முதல் தனது கணவர் மற்றும் மகனை காணவில்லை என்று புகாரளித்தார்.

போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.முதலில் அவர்கள்தீபிகாவிடம் இருந்து விசாரனையை தொடங்கினர். பலமுறை விசாரணையில் முன்னுக்கு முரனாக பதலளித்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வீட்டின் அருகே உள்ள சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்துவிட்டதாக தீபிகா கூறியதாப போலீசார் தெரிவித்துள்ளனர். புதைத்த இடம் என்று கூறி ஒரு இடத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீபிகாவை தீவிர விசாரணை செய்துள்ளனர். கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீசை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்துவிட்டதாக தீபிகா கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புதைத்த இடம் என்று கூறி ஒரு இடத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

தன் கணவன் தினமும் குடித்துவிட்டு ரகளை செய்ததாகவும், இதனை தன்னால் தாங்க இயலாததால் கொலை செய்ததாக கூறினார். குழந்தையை தவிக்கவிட கூடாது என்பதால் அவனையும் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த செய்தி ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.