அவர் தூங்கிட்டார்..! நீ வீட்டுக்கு வா..! கணவன் இருக்கும் போதே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலி செய்த பகீர் செயல்!

தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கணவனை கொலை செய்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் கொடிக்கால்புதூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியில் இயங்கிவந்த நூற்பாலையில் சத்யா பணியாற்றி வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநரான ராமமூர்த்தி என்பவருடன் சத்யா நெருங்கி பழகி வந்துள்ளார். நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ராமன் சத்யாவை கடுமையாக கண்டித்துள்ளார். இருப்பினும் சத்யா, தொடர்ந்து ராமமூர்த்தியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் ராமன் மற்றும் சத்யா இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

20-ஆம் தேதியன்று ராமன் உயிரிழந்துவிட்டதாக கூறி சத்யா உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் ராமனுக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர். இருப்பினும் தன்னுடைய சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக லட்சுமணன் என்பவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சத்யாவிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் விசாரணைக்கு ஈடு கொடுக்க இயலாத சத்யா, தானும் தன்னுடைய கள்ளக்காதலனும் இணைந்து ராமனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, இரவு உணவில் ராமனுக்கு சத்யா தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். மயக்கமுற்ற நிலையில் இருந்தபோது கள்ளக்காதலன் ராமமூர்த்தியை வரவழைத்து இராமனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சத்யா காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.