வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் மாயம்! அதன் பிறகு இரவு வந்து சென்ற இளைஞன்! 7 மாதத்திற்கு பிறகு தெரிந்த மனைவியின் லீலை!

பஞ்சாபில் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய கணவன் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் இணைந்து அவரது மனைவியே கணவனை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய சம்பவத்தின் உண்மை பின்னணி தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வந்தவர் குர்ஜித் சிங். இவருடைய மனைவி பெயர் மண்ப்ரீத். குர்ஜித் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் தன்னுடைய குடும்பத்தினரை சந்திப்பதற்காக நாடு திரும்பி இருக்கிறார். பின்னர் பஞ்சாபில் இருக்கும் தன்னுடைய சொந்த ஊருக்கு மனைவி அண்ணன் அண்ணி ஆகியோரை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் குர்ஜித். இதனைத் தொடர்ந்து குர்ஜித் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முதல் காணாமல் போயிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குர்ஜித்தின் சகோதரர் மன்பிரீத் இடம் விசாரித்திருக்கிறார். அப்படி விசாரிக்கும் போது, தனது கணவர் பக்கத்து ஊரில் ஒருவருக்கு கடன் அளித்துள்ளதாகவும் அந்த கடனை விசாரிப்பதற்காக அவர் சென்று இருக்கிறார் எனவும் குர்ஜித்தின் மனைவி மன்பிரீத் கூறியிருக்கிறார். மன்பிரீத் அளித்த பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இருப்பினும் சிறிது காலம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று யோசித்திருக்கிறார். ஆனால் தனது சகோதரர் காணாமல்போய் பல மாதங்கள் ஆன நிலையில் வேறொரு இளைஞர் ஒருவர் அடிக்கடி மன்ப்ரீத்தின் வீட்டிற்கு வந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

இதனால் சந்தேகமடைந்த அவர் தன்னுடைய சகோதரரை பல மாதங்களாகக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார். தகவலறிந்து வந்த போலீசார் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட குர்ஜித்தின் மனைவியிடம் விசாரணையை துவங்கியுள்ளனர். விசாரணையின்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

மன்பிரீத் தனது கணவன் வெளிநாட்டில் வேலைக்கு சென்றவுடன் ஹர்மன் என்ற வேறு ஒரு இளைஞருடன் கள்ளத் தொடர்பில் இருந்திருக்கிறார். இதனையடுத்து கணவர் நாடு திரும்பியவுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தவறான தொடர்பு பற்றி குர்ஜித்திற்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தன் மனைவியை சண்டையிட்டு இருக்கிறார். இதனை அடுத்து மன்பிரீத் மற்றும் ஹர்மன் ஆகியோர் இணைந்து குர்ஜித்தை கொலை செய்து உடலை ஆற்றில் வீசியுள்ளனர். 

இதனை அடுத்து போலீசார் மன்பிரீத் மற்றும் ஹர்மன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.