நள்ளிரவில் கணவன் கொலை..! பிறகு காதலனுடன் உல்லாசம்! கிருஷ்ணகிரி திகில் சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து நள்ளிரவில் மனைவியே கணவனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை அருகே பழையூர் என்ற பகுதி அமைந்துள்ளது. தர்மபுரியில் இருக்கும் இனிப்பு கடை ஒன்றில் கூலி தொழிலாளியாக பணி புரியும் வடிவேலு (வயது 29) என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆஷா ( 24) என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் வசித்து வரும் இதே பகுதியில் மணிகண்டன் (வயது 20) என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்த பகுதியில் சென்ட்ரிங் பணியை செய்து வருகிறார்.

மணிகண்டனுக்கும் வடிவேலுவின் மனைவி ஆஷாவிற்கும் கடந்த ஆறு மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் கள்ள தொடர்பு பற்றி வடிவேலுக்கு தெரியவந்துள்ளது. உடனே வடிவேலு தன் மனைவி ஆஷாவை கண்டித்திருக்கிறார்.

ஆஷா உடனே தன்னுடைய கள்ளக் காதலனான மணிகண்டனை அழைத்து இனி என்னால் உங்களுடன் சகஜமாக பழக முடியாது . என் கணவருக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று கூறியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத மணிகண்டன் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருக்கிறார்.

அதாவது இருவரும் இணைந்து வடிவேலுவை கொன்றுவிடுவோம் என்று திட்டம் தீட்டி உள்ளனர். நேற்றைய முன் தினம் ஆஷாவின் கணவர் வடிவேலு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆஷா தன் கள்ளக் காதலன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து இருக்கிறார்.

ஆஷாவின் வீட்டிற்கு வந்த மணிகண்டன் அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி வடிவேலுவை கொலைசெய்ய முடிவு செய்துள்ளனர். அவரது வீட்டில் இருந்த இரும்பு ராடை பயன்படுத்தி ஆஷாவும் மணிகண்டனும் இணைந்து வடிவேலுவை சரமாரியாக தாக்கி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். 

கணவரை கொன்று விட்டு ஆஷா தன்னுடைய கள்ளக்காதலனுடன் விடிய விடிய உல்லாசமாக இருந்திருக்கிறார். தினந்தோறும் அதிகாலையில் வந்து பால் பாக்கெட்டை வாங்கி செல்லும் வடிவேலு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆஷாவின் நடவடிக்கையும் பொதுமக்களின் சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஆஷாவை விசாரித்தபோது தானும் தன்னுடைய கள்ளக் காதலனான மணிகண்டனும் இணைந்து தன் கணவர் வடிவேலுவை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து போலீசார் வடிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆஷா மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது கொலை வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.