திருமணமாகி 20 நாள்! காதல் கணவனை உயிரோடு கொளுத்திய காதல் மனைவி! அதிர வைக்கும் காரணம்!

திருமணமான 20 நாட்களுக்குள் கணவனை மனைவி கொலை செய்து இருக்கும் சம்பவமானது திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டிவனத்தில் தில்லையாடி எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. இதேப்பகுதியை சேர்ந்த முருகவேணி என்னும் பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக சேதுபதிக்கு நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது காதலாக மாறியது. 20 நாட்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

சேதுபதி திருமணமான முதல்  முருகவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகவேணி கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளார். மேலும் சேதுபதி தினமும் மது அருந்திவிட்டு முருகவேணியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சேதுபதியை கொலை செய்ய அவருடைய மனைவி திட்டமிட்டுள்ளார். நேற்று மதியம் வீட்டில் சேதுபதி உறங்கி கொண்டிருந்தார். அப்போது முருகவேணி கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் இட்டுள்ளார். மேலும் வெளியே சென்றவுடன் குடிசைக்கு தீ வைத்துள்ளார்.

தீயில் சிக்கிக்கொண்ட சேதுபதி சம்பவ இடத்திலேயே  உடல் கருகி இறந்து போனார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மிகவும் போராடி தீயை அணைத்தனர். தில்லையாடி காவல்துறையினர் சேதுபதியின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் வீடு தீப்பற்றி எரிய தொடங்கிய சில நிமிடங்கள் முன்னர் முருகவேணி வெளிப்புறத்தில் தாழ்ப்பாளிட்டு சென்றதாக கூறியுள்ளனர்.

சந்தேகத்தின் பெயரில் முருகவேணியை காவல்துறையினர் விசாரித்தபோது, மேற்கூறப்பட்டுள்ள விவரங்களை கூறி முருகவேணி காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். இந்த சம்பவமானது திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.