உன் மகன் எனக்குப் பிறக்கவில்லை! கணவன் கூறிய ஒரே வார்த்தை! மனைவி அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமானது திருவள்ளூர் ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்திற்கு அருகே பட்டபிரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 27. இவருடைய மனைவியின் பெயர் கௌரி. கௌரியின் வயது 25. இத்தம்பதியினருக்கு ஆகாஷ் என்ற 1.5 வயது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராஜ் மதுபோதைக்கு அடிமையானார். தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் அவருக்கு கௌரியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளன. மேலும் ஆகாஷ் தனக்கு பிறந்த மகன் அல்ல ஆனால் அவனை கொலை செய்யப்போவதாக கௌரியை மிரட்டியுள்ளார். மேலும் ராஜ் கௌரியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

2016-ஆம் ஆண்டில் திடீரென்று ஒருநாள் மதுபோதையில் வந்த ராஜ் தன் மனைவியையும் குழந்தையையும் பலமாக தாக்கியுள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த கௌரி அம்மிக்கல்லை போட்டு ராஜை கொலை செய்து விட்டார். 

யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்து தலைமறைவாகி விட்டார். 2 நாட்கள் துர்நாற்றம் வீசிய போது தான் ராஜ் இறந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. காவல்துறையினர் ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த கௌரியை கண்டுபிடித்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நேற்று காலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் வெளிவந்தது. கணவனை கொன்ற குற்றத்திற்காக கௌரிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.