சைக்கிள் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சைக்கிள் கடைக்காரர் தற்கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்! உல்லாசத்துக்கு இடையூறு செய்ததால் மனைவி அரங்கேற்றிய படுபாதகம்! காட்பாடி திகுதிகு!

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி எனும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பாரதி நகர் எனும் இடத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் சொந்தமாக சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பவானி. இந்நிலையில் இவர் கடந்த மே மாதத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனால் காவல்துறையினர் பெருத்த சந்தேகமடைந்தனர். ஆரம்பத்திலிருந்தே சரவணனின் மனைவி மீது காவல் துறையினருக்கு சந்தேகமிருந்து வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு சந்தேகம் வலுத்தது. உடனடியாக காவல்துறையினர் பவானியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. பவானிக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் நிலவி வந்துள்ளது.
தங்களுடைய கள்ளக்காதலுக்கு சரவணன் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த சரவணனின் கை, கால்களை கட்டி அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அவரை கயிற்றில் கட்டி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினர்.
வாக்குமூலம் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பவானியையும் வேலாயுதத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.