நான் இருக்கும் போதே அவனுடன்..! படுக்கை அறையில் மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட பகீர் சம்பவம்! திருவள்ளூர் திகில்!

கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவர் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ள சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் நல்லூர் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இதற்குட்பட்ட ஆட்டந்தாங்கல் பஜனை கோவில் தெருவில் அஞ்சம்மாள் என்ற 28 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் துளசிராமன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக அஞ்சம்மாள் தன்னுடைய உறவினரான பார்த்திபன் என்ற 32 வயது நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சில வாரங்களுக்குப் பிறகு தெரிந்துகொண்ட துளசிராமன் தன்னுடைய மனைவி அஞ்சம்மாளை கண்டித்துள்ளார். 

கணவரின் கண்டிப்பையும் பொருட்படுத்தாத அஞ்சம்மாள் தொடர்ந்து பார்த்திபனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தொடர்ந்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று அதிகாலை வழக்கம்போல இருவருக்குமிடையே தகராறுகள் ஏற்பட்டன. ஆத்திரமடைந்த துளசிராமன் நிதானம் இழந்து கையில் அகப்பட்ட இருந்து சுத்தியலால் அஞ்சம்மாள் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு எடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணிநேரத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அஞ்சம்மாள் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள துளசிராமனை வலைவீசி தேடி வருகின்றனர்‌. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.