இயற்கைக்கு மாறான உடல் உறவு! கணவனை உயிரோடு எரித்த மனைவி! மதுராந்தகம் பரபரப்பு!

மது அருந்திவிட்டு ரகளை செய்த கணவரின் தொந்தரவை தாங்க இயலாத மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி அவரை உயிருடன் எரித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகத்திற்கு அருகே ஆணைக்குன்றம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கன்னியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். கல்யாணமான தொடக்கத்திலிருந்தே கன்னியப்பனுக்கு மது பழக்கம் இருந்தது.  காலம் செல்ல செல்ல மது பழக்கம் அளவுக்கு அதிகமாகி அவர் மதுபோதைக்கு அடிமையாகி விட்டார்.

அளவுக்கு அதிகமாக தினமும் குடிக்கத் தொடங்கினார். தன்னிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படியாவது குடித்தாக வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது. தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு தள்ளாடியபடி வந்து தன் மனைவியான மலரிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவார். செக்ஸ் டார்ச்சர் செய்வார். போதை தலைக்கேறிய பிறகு மலரை கண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவார்.

இதை பல ஆண்டுகளாக கன்னியப்பன் வாடிக்கையாக வைத்திருந்தார். மலரிடம் பணம் கேட்டும் துன்புறுத்துவார். அவளிடம் பணம் இல்லையென்றால் அவளை அடித்து துன்புறுத்தி நகைகளையும் வீட்டு உபயோகத்திற்காக சேர்த்து வைத்துள்ள பணத்தையும் பிடுங்கி செல்வார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல மது அருந்திவிட்டு மலரிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் களிலும் சண்டைகளிலும் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் கட்டிய மனைவி என்றும் பாராமல் இயற்கைக்கு மாறான உறவுக்கு வலியுறுத்தியுள்ளார். பின்னர் போதை அதிகமானதால் வீட்டிற்கு அருகில் உள்ள பம்ப் செட்டில் நிலை தடுமாறி விழுந்து கிடந்தார்.  கணவன் மீது கோபமுற்ற மலர் மண்ணெண்ணையை எடுத்துச் சென்று கன்னியப்பனின் உடல் முழுவதிலும் ஊற்றி தீ வைத்துள்ளார். வெப்பம் தாங்காமல் கன்னியப்பன் அலறிக் கொண்டிருக்க, பொதுமக்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். மலரிடம் இந்த செய்தியை அக்கம்பக்கத்தினர் பகிர்ந்தபோது அவள் தானாகவே அந்தப் பகுதி காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.