திருமணமான பிறகும் பிரபல நடிகர் மீது அதீத ஈர்ப்பு..! கண்டித்த கணவன்..! கேட்காத மனைவி..! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

பாலிவுட் நடிகர் மீது அதீத ஈர்ப்பில் இருந்த மனைவியை கணவன் கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர் தினேஷ்வர் பட்திதஸ். இவருடைய வயது 33. வேலை நிமித்தமாக அமெரிக்கா நாட்டிற்கு சென்றார். சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் இவர் டோன்னி ஜொஜோய் என்ற 27 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்த சில நாட்களிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். சிலமுறை தினேஷ்வர் தன் மனைவியை தாக்கியதும் உண்டு. 

ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் பெருகியுள்ளன. ஆத்திரமடைந்த தினேஷ்வர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். சம்பவம் முடிந்தபிறகு டோன்னி காவல்நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். நீதிமன்ற விசாரணையில் மனைவியை தாக்கியதை தினேஷ்வர் ஒப்புக்கொண்டுள்ளார். தண்டனை விவரங்கள் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் டோன்னிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பதற்காக டோன்னி, தினேஷ்வரின் வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென்று இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது தினேஷ்வர் டோன்னியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும், தானும் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு தன் உறவினர் ஒருவருக்கு குறுஞ்செய்தியின் மூலம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக அந்த உறவினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன. சம்பவம் குறித்து டோன்னியின் சகோதரி கூறுகையில், "என் சகோதரிக்கு பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது அதீத ஈர்ப்பு இருந்து வந்தது. இதனால் பொறாமை கொண்ட தினேஷ்வர் அவரை கொலை செய்துவிட்டார். இதன் காரணமாகவே எப்பொழுதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தன" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அமெரிக்கா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.