திருமணமான 4 மாதத்தில் தவிக்கவிட்டு சென்ற கணவன்! தனிமை ஏக்கத்தில் மனைவி எடுத்த பகீர் முடிவு!

வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்குவங்க மாநிலத்தில் பிரகினாஸ்தாய்தலா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மனைவியின் பெயர் ஷர்மாமண்டல். ஷர்மாமண்டலின் வயது 28. இவ்விருவரும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே இருவரும் வேலை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை என்னும் பகுதிக்கு உட்பட்ட சடையகவுண்டன்புதூரில் தனியார் கொசுவலை நிறுவனம் இயங்கி வருகிறது. இவ்விருவரும் அந்த நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.

இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக சம்சுதின் மனவிரக்தியில் காணப்பட்டார். மேலும் மனைவியிடம் சொல்லிக்கொள்ளாமல் சம்சுதின் மேற்குவங்காளத்திற்கு சென்றார்.

கணவன் தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் மேற்குவங்காளம் சென்றதை ஷர்மாமண்டலால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மனவிரக்தியில் காணப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். ஷர்மாமண்டலின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.