கள்ளக் காதலன் வைத்திருக்கிறாள்! பாலியல் தொல்லை தருகிறார்! இன்ஸ்பெக்டர் - மனைவி மாறி மாறி புகார்!

இன்ஸ்பெக்டரின் மனைவியொருவர் இன்ஸ்பெக்டர் மீது சரமாரியாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் பிரதிமா. இவருடைய வயது 32. இவருக்கு பல ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஒரு பெண் குழந்தையும் இவருக்கு உள்ளது. கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றதால் தனிமையில் வசித்து வருகிறார்.

பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இவருடைய முதல் கணவன் இவருக்கு போன் செய்து தொந்தரவளித்து வந்துள்ளார். தன்னுடைய கம்பெனி முதலாளியிடம் இதை பற்றி பிரதிமா கூறியுள்ளார். அவர் பிரதிமாவை திருச்சி காவல்நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளார். 

அந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க பிரதிமா சென்றார். அங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மனைவி இறந்துவிட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். தன் குழந்தைக்கும் ஆதரவு வேண்டும் என்பதால் பிரதிமா ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் திருச்சியில் ஒரே வீட்டில் தங்கி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது அவர் தன்னுடைய மகனுக்கு பிடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பிரதிமாஅடம் பிடித்த காரணத்தினால் அவர் சாமி படத்தின் முன் பிரதிமாவுக்கு தாலி கட்டினார். 

அவர் ஈரோட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருடைய குடும்பத்தினரிடம் பிரதிமாவை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் வெள்ளக்கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு சுமார் 8 மாதங்கள் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பிருப்பதை பிரதிமா கண்டறிந்துள்ளார்.

இதனை இன்ஸ்பெக்டரிடம் தட்டி கேட்ட போது அவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். தனக்கு நேர்ந்த இன்னல்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக பிரதிமா உதவி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அவர் இன்ஸ்பெக்டரை வன்மையாக கண்டித்தார்.

அதன் பின்னர் இன்ஸ்பெக்டர் பிரதிமாவை மேலும் அடித்து துன்புறுத்த தொடங்கினார். பல்வேறு விதங்களில் அவருக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள இயலாத நிலையை அடைந்த பிரதிமா திருப்பூர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தன் கணவனை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவருடைய பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இன்ஸ்பெக்டர், "என் மனைவி இறந்து போன போது என் மகனுக்காக ஒரு துணையை தேடினேன். அப்போதுதான் அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். என் மகன் மீது பாசம் காட்டி வந்ததால் நான் அவரை என்னுடன் அழைத்து சென்றேன். இந்நிலையில், அவருக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த நான் அவரை கண்டித்தேன். அதற்கு அவர் என் ஜீப்பின் கண்ணாடியை உடைத்தார். இதற்கு தண்டனை அளிக்கும் வகையில் துன்புறுத்தியது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.