3 பெண் பிள்ளைகள்! அடுத்தடுத்து தூக்கி ஆற்றில் வீசிய தாய்! பெற்ற தாய் அரங்கேற்றிய படுபயங்கர சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் சாத்தபாடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சத்தியவதி. இத்தம்பதியினருக்கு அக்ஷயா, நந்தினி, தர்ஷினி என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூத்த குழந்தையான அக்ஷயா தனியார் பள்ளிகள் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் சத்யவதியின் தாயார் வீட்டில் வசித்து வருகின்றனர். திருமணமான காலத்திலிருந்து மணிகண்டனுக்கு விடாத குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவி சத்தியவதியிடம் தகராறு செய்வதை மணிகண்டன் வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல இருவருக்கும் தகராறுகள் ஏற்பட்டன. இதனால் மனமுடைந்த சத்தியவதி தன்னுடைய குழந்தைகளுடன் மிராளூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

சேத்தியாத்தோப்பு பகுதியில் இறங்கிய சத்தியவதி அப்பகுதியில் உள்ள மானம்பார்த்த வாய்க்காலில் 3 குழந்தைகளையும் வீசியுள்ளார். அதன் பின்னர் நேரடியாக சேத்தியாத்தோப்பு கிராமத்திற்கு சென்று சரணடைந்து விட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அயராது மீட்புப்பணியில் ஈடுபட்டு 2 குழந்தைகளை சடலமாக மீட்டெடுத்தனர். பின்னர் மீதமுள்ள ஒரு குழந்தையின் சடலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு காவல்துறையினர் தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சேத்தியாத்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.