மனைவியை கொசு மருந்தை குடிக்க வைத்த கொடூர கணவன்! வாட்ஸ் ஆப் சேட்டிங்கால் நிகழ்ந்த பயங்கரம்!

தன் மனைவி இன்னொருவருடன் பேசிக்கொண்டு இருந்தார் என்பதற்காக கணவன் கொசு மருந்து கொடுத்து மனைவியை கொலை செய்திருக்கும் சம்பவமானது ஆக்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் சோனு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 9 ஆண்டுகள் முன்னர் அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.  இத்தம்பதியினருக்கு 4 மற்றும் 6 வயதுகளில் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சோனு தன் மனைவி அஞ்சலி யாருடனோ வாட்ஸ்ஆப்பில் பேசி வந்துள்ளார்.  இதனை கண்டுபிடித்த சோனு, தனக்கு இது பிடிக்கவில்லை என்றும், நிறுத்திக்கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அஞ்சலில் அந்த நபருடன் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனு தன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தன் மனைவியை கொசு மருந்தை குடிக்க வைத்துள்ளார். குடித்த பின்னர் அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது கழுத்தை நெரித்து தன் மனைவியை சோமு கொலை செய்துவிட்டார்.

பிறகு தங்களின் உடலை அருகில் இருந்த வீட்டின் முன்பகுதியில் தோண்டி புதைத்து உள்ளார். அஞ்சலி காணவில்லை என்று அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் ஆன்லைன் ஹ அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை தனிப்படை அமைத்து அஞ்சலியை கொலை செய்தவரை வலை வீசி தேடி வந்தனர்.

காவல்துறையினர் அஞ்சலியின் கணவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அஞ்சலியின் மீதுருந்த ஆத்திரத்தில்‌ இருந்த சோனு அவரை கொசு மருந்தை குடிக்க செய்ததையும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதையும் சோனு ஒப்புக்கொண்டுள்ளார்.

வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் சோனுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தில்‌ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.