கணவன் கண் முன் டீச்சர் மனைவிக்கு நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் முன் மனைவி பலியான சம்பவமானது செங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்குன்றம் பகுதியில் எம்.ஏ நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவியின் பெயர் லதா வயது 38. வழக்கம் போல நேற்று காலை கணவரின் இருசக்கர வாகனத்தில் ஜி.எம்.டி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

சோழவரத்திலிருந்து புழல் நோக்கி அதிவேகத்தில் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி ஓட்டுநர் பிரபுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த லதா எதிர்பாராவிதமாக சறுக்கி கீழே விழுந்தார். அப்போது லாரி அவர் மீது ஏறி சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே லதா உயிரிழந்தார். கணவர் பிரபுவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரபுவை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவமறிந்த காவல்துறையினர் விபத்து பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்திய போது மகேந்திரன் என்பவர் தான் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் மகேந்திரன் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கணவனின் கண்முன் மனைவி உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.