புருசனா இருந்தாலும் ஒரு அளவு வேண்டாமா..? நேரம் காலம் பார்க்காமல் தொல்லை..! இளம் மனைவி எடுத்த பகீர் முடிவு!

கணவரின் துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள இயலாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சந்தியா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 20. இவர் சென்ற ஆண்டு அதே மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்தின் தொடக்கத்தில் இருவரும் மிகவும் பாசமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் காலம் செல்ல செல்ல இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியுள்ளன. இதனால் கணவன் மனைவி அடிக்கடி சண்டை போட்டு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவியிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதனால் சந்தியா மிகவும் மனமுடைந்து போனார். அந்த நிகழ்விலிருந்து சந்தியாவின் நடவடிக்கைகள் பல மாறுதல்களை அடைந்தன.

மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்ட சாந்தியா செவ்வாய்க்கிழமையன்று பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தியானது சந்தியாவின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சந்தியாவின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜெகதீஷ் மற்றும் அவருடைய தாயாரின் மீது புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சந்தியாவின் மரணம் கொலையா என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.