பணத்துக்காக தவிக்கவிட்ட கணவன்..! 2 சின்னஞ்சிறு குழந்தைகளுடன் 27 வயதில் மனைவி எடுத்த பகீர் முடிவு! அதிர்ந்த கன்னியாகுமரி!

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


நாகர்கோவில் மாவட்டத்தில் அருக விலை சுடலை சாமி கோவில் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகேயுள்ள தெருவில் பிரவீன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 27. இவருடைய மனைவியின் பெயர் மினி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

கடந்த சில மாதங்களாகவே அன்றாட குடும்ப செலவிற்காக பிரவீன்ராஜ், மினியிடம் சரிவர பணத்தை தரவில்லை‌. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்த வண்ணமுள்ளன. மேலும் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் குடியில் செலவழித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மினி கணவரிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று பிரவீன்ராஜ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, மினி தன்னுடைய குழந்தைகளுடன் விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் நுரை தள்ளியபடி 3 பேரும் கிடந்துள்ளனர். மூவரின் நிலையை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இன்று காலையில் மினியின் உடல்நிலை மோசமடைந்தது.  பரிசோதித்த மருத்துவர்கள் மினி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், 2 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்க போராடி வருகின்றனர். சம்பவமறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் மினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.