நான் இல்லாத போது வீட்டுக்கு வருவது யார்? காதல் கணவன் கேட்ட விபரீத கேள்வி! மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

கணவர் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குலசேகரம் அருகே நாககோடு பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே அம்பலத்துவிள்ளை என்னும் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 35. இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வஜூ. சுனில் குமாரும், வஜூவும் 8 ஆண்டுகள் முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையின் தொடக்கத்தில் இருவரும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன. பலமுறை இருவரது சண்டைகளை கண்டு குழந்தைகள் அஞ்சியுள்ளனர்.

சமீப காலத்தில் சுனில்குமார் வஜூவின் நடத்தையில் சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் பலமுறை கைகலப்பு ஏற்பட்டு உள்ளன. வழக்கம் போல நேற்று இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுனில் குமார் மனைவியை புண்படுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார்.

நான் இல்லாத போது யார் வீட்டுக்கு வந்து செல்வது என்கிற ரீதியில் அவர் பேசியுள்ளார். பின்னர் கோபம் தலைக்கேறியதால் வீட்டை விட்டு வெளியேறினார். கணவன் தன் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகித்து வருவது வஜூவை பெரிய அளவில் பாதித்தது. ஆதலால் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கதிகமாக உண்டார். சுயநினைவை இழந்து அவர் நுரை தள்ளி இறந்துவிட்டார். 

மாலை நேரத்தில் சுனில் குமார் வீடு திரும்பியபோது, அவருடைய மனைவி வஜூ நுரை தள்ளி அசைவின்றி கிடந்தார். பதறிய சுனில் குமார் அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் வரும் வழியிலேயே வஜூ இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த சிவசேகரம் பகுதி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வஜூவின் உடலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் இறந்த முறையை பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.